Tuesday, October 9, 2018

நரசிம்மவர்மன் | Narasimha Varman

பிணந்தின்னி கழுகுகளின் கூடாரம் போல் அந்நகரம் முற்றிலும் சர்வநாசம். மரண ஓலங்கள் கூட கேட்காத அளவு நிசப்தம். தெருக்களில் சிந்திய இரத்தத்தை காயவைக்க கூட வராத சூரியன். சூரியனே தெரியாத அளவு மாளிகைகளில் இருந்து வந்த பெரிய புகை மண்டலம். போர்வீரர்களின் ஆரவாரங்களுக்கு இடையில் வராக கொடி வீழ்ந்து, ஏற்றப்படுகிறது சிம்மக்கொடி .

நடப்பதெல்லாம் வாதாபியில் தான். சாளுக்கிய தலைநகர் என யாரும் கூறமுடியாத அளவு அழிவு அது. அப்படி ஒரு பழிவாங்குதலை வரலாற்றில் எங்கும் கண்டதில்லை அம்மக்கள். எல்லாம் மாமல்லனான நரசிம்மவர்ம பல்லவன் துடைத்தெரிந்தது தான். காரணம் இரண்டாம் புலிகேசி கீழை கடல் வணிகத்தை கைப்பற்ற காஞ்சியை நோக்கி படையெடுத்தது.
காஞ்சியை ஆண்ட மகேந்திரவர்ம பல்லவனை, பெரும்போரில் தோற்க்கச் செய்து பல்லவ நாட்டு எல்லையினை சிறிது அபகரித்திருந்தான் புலிகேசி. ஆனாலும் காஞ்சியை தொட கூட முடியவில்லை. போரில் தோற்று காயம்பட்டிருந்த மகேந்திரவர்மன்... "நான் பட்ட காயம் தீரடா மாமல்லா, பரஞ்சோதி உடனிருப்பான்" என்று சபதம் பெற்றான் தன் மகன் நரசிம்மவர்மனிடம்.

கீழை கடல்வணிகம் கைப்பற்ற வேண்டி மீண்டும் பையெடுத்தான் புலிகேசி. இம்முறை எப்படியாயினும் காஞ்சியை தன் எல்லைக்குள் சேர்த்துவிடுவதாய் என்னியிருந்த புலிகேசியுடன் மாமல்லன் மோதியது மணிமங்கலத்தில் தான். யாரிடமும் தோற்காத மாமல்லனிடம், புலிகேசியும் தோற்று பெருமை கொண்டான். வெற்றிகொண்ட மாமல்லன் தன் தளபதி பரஞ்சோதியுடன் வாதாபியை தீக்கிரையாக்கி கபளீகரம் செய்தான். தன் மக்கள் பெற்றதை வட்டியும் முதலுமாய் வாதாபி மக்களுக்கு பரிசளித்து, வஞ்சம் தீர்த்து சபதம் முடித்து "பாதாவிகொண்ட நரசிங்க போத்தரையரென" பட்டம் கொண்டான்.

இதற்கெல்லாம் களம் கொடுத்து அடித்தளம் இட்டது திருப்பெரும்புதூர் தாம்பரம் இடையில் இருக்கும் "ஜயங்கொண்ட சோழ மண்டலத்து குலோத்துங்க சோழ வளநாட்டு புலியூர் கோட்டத்து குன்றத்தூர் நாட்டு மணிமங்கலம் தான்". இதுவும் ஒரு பல்லவ நாட்டு பூமி என்று சில தடயம் மட்டுமே கூறும். அதில் ஒன்று இந்த அழகிய சிம்மத்தூண்.

மணிமங்கலம் | #திருப்பெரும்புதூர் அருகில் | காஞ்சி மாவட்டம்.

pallava's simma pillar
Simma Pillar

No comments:

Post a Comment

Mamandur Rock cut temple