Monday, November 12, 2018

Mamandur Rock cut temple

Birds eye view of The Pallava Period Rock-cut temples in Mamandur

Mamandur Rock cut temple
Bird view of The Pallava Rock-cut temples in Mamandur

- a village on the Kanchipuram - Vandavasi road, near Dusi, about 15 km from Kanchipuram.
It is known for the 7th-century rock-cut cave temple, housing a Tamil Brahmi inscription, one of the monuments of National Importance as declared by the Archaeological Survey of India (ASI).

Brahmi is the earliest Indian alphabetical script with regional variations, dated between 300 BCE and 300 CE. Inscriptions in the rock-cut temples , attribute the temples to 7th-century CE Pallava king, Mahendravarman I, a ruler who delighted in the titles of Vichitra chitta (“curious-minded”) and Chitrakara puli (“tiger among artists”).

This complex has
1. 4 Rock Cut temples dedicated for different gods,
2. A Samana Kall Padukkai aka "Jain Rock Bed" where jain saints used to sleep.

Pic: Praveen Quak Photography via CelebrateKANCHI

Tuesday, October 9, 2018

நரசிம்மவர்மன் | Narasimha Varman

பிணந்தின்னி கழுகுகளின் கூடாரம் போல் அந்நகரம் முற்றிலும் சர்வநாசம். மரண ஓலங்கள் கூட கேட்காத அளவு நிசப்தம். தெருக்களில் சிந்திய இரத்தத்தை காயவைக்க கூட வராத சூரியன். சூரியனே தெரியாத அளவு மாளிகைகளில் இருந்து வந்த பெரிய புகை மண்டலம். போர்வீரர்களின் ஆரவாரங்களுக்கு இடையில் வராக கொடி வீழ்ந்து, ஏற்றப்படுகிறது சிம்மக்கொடி .

நடப்பதெல்லாம் வாதாபியில் தான். சாளுக்கிய தலைநகர் என யாரும் கூறமுடியாத அளவு அழிவு அது. அப்படி ஒரு பழிவாங்குதலை வரலாற்றில் எங்கும் கண்டதில்லை அம்மக்கள். எல்லாம் மாமல்லனான நரசிம்மவர்ம பல்லவன் துடைத்தெரிந்தது தான். காரணம் இரண்டாம் புலிகேசி கீழை கடல் வணிகத்தை கைப்பற்ற காஞ்சியை நோக்கி படையெடுத்தது.
காஞ்சியை ஆண்ட மகேந்திரவர்ம பல்லவனை, பெரும்போரில் தோற்க்கச் செய்து பல்லவ நாட்டு எல்லையினை சிறிது அபகரித்திருந்தான் புலிகேசி. ஆனாலும் காஞ்சியை தொட கூட முடியவில்லை. போரில் தோற்று காயம்பட்டிருந்த மகேந்திரவர்மன்... "நான் பட்ட காயம் தீரடா மாமல்லா, பரஞ்சோதி உடனிருப்பான்" என்று சபதம் பெற்றான் தன் மகன் நரசிம்மவர்மனிடம்.

கீழை கடல்வணிகம் கைப்பற்ற வேண்டி மீண்டும் பையெடுத்தான் புலிகேசி. இம்முறை எப்படியாயினும் காஞ்சியை தன் எல்லைக்குள் சேர்த்துவிடுவதாய் என்னியிருந்த புலிகேசியுடன் மாமல்லன் மோதியது மணிமங்கலத்தில் தான். யாரிடமும் தோற்காத மாமல்லனிடம், புலிகேசியும் தோற்று பெருமை கொண்டான். வெற்றிகொண்ட மாமல்லன் தன் தளபதி பரஞ்சோதியுடன் வாதாபியை தீக்கிரையாக்கி கபளீகரம் செய்தான். தன் மக்கள் பெற்றதை வட்டியும் முதலுமாய் வாதாபி மக்களுக்கு பரிசளித்து, வஞ்சம் தீர்த்து சபதம் முடித்து "பாதாவிகொண்ட நரசிங்க போத்தரையரென" பட்டம் கொண்டான்.

இதற்கெல்லாம் களம் கொடுத்து அடித்தளம் இட்டது திருப்பெரும்புதூர் தாம்பரம் இடையில் இருக்கும் "ஜயங்கொண்ட சோழ மண்டலத்து குலோத்துங்க சோழ வளநாட்டு புலியூர் கோட்டத்து குன்றத்தூர் நாட்டு மணிமங்கலம் தான்". இதுவும் ஒரு பல்லவ நாட்டு பூமி என்று சில தடயம் மட்டுமே கூறும். அதில் ஒன்று இந்த அழகிய சிம்மத்தூண்.

மணிமங்கலம் | #திருப்பெரும்புதூர் அருகில் | காஞ்சி மாவட்டம்.

pallava's simma pillar
Simma Pillar

Wednesday, October 3, 2018

மகிஷாசுரமர்தினி குடைவரை | mahishasura mardini cave

போரின் இறுதிக்கட்டம் அது. 

உடல் முறுக்கெடுத்த இளம்பெண்கள் முன் வரிசையிலும், வயிறு தள்ளிய சீனியர் போர்வீரர்கள் பின் வரிசையிலும், நடுவே வில்லாலர்களும், காற்றில் பாய்ந்து தாக்கும் வீரர்களும் கொண்ட அன்னை கொற்றவையின் படைகளுக்கும்...

இதற்கு எவ்வகையிலும் சலைக்காத வாளும் கேடயமும் உடைபோல் கொண்டிருந்த மகிஷனின் தலைமைக் கொண்ட படைகளுக்குமான போரின் இறுதிக்கட்டம் தான் அது.

பகைவனை குதறியபடி காற்றில் பாயும் சிம்மத்தின் மேல் உள்ள, கொற்றவையின் வில் அம்பு, தன் படை வீரரை தாக்கி கொண்டிருந்த மற்றொரு பகைவனை குறிவைக்கிறது.

உண்மையில் இங்கு அந்த இலக்கினுள் இருப்பவனே பெரிய வீரன், படத்தில் மகிஷனின் தலைக்குமேல் இடப்புறம் இருப்பவன் தான் அவன். காரணம், கொற்றவையின் தாக்குதலில் உயிர் பிழைக்க ஓடும் மகிஷனின் படையில் கடைசி நேரத்திலும்., ஒற்றையாய் கொற்றவை படையினை எதிர்த்து தாக்குவது தான்.

mahishasura mardini, cave, cave temple, rockcut temple, mahishasura mardini cave
மகிஷாசுரமர்தினி குடைவரை
தன்னுடன் போரிட்ட தன் பகைவரின் போர்த்திறம் கண்டு கூட பல்லவன் அதை சிற்பமாய் வடித்திருக்கலாமோ என்னவோ!

எப்படியாயினும் சிற்ப கலையில் பல்லவன் பல்லவன் தான்

மகிஷாசுரமர்தினி குடைவரை | மாமல்லபுரம் | காஞ்சிபுரம் மாவட்டம்

Wednesday, December 6, 2017

விஷ்ணுதுர்க்கை


1200 (கி.பி 9) ஆண்டுகள் பழமையான திருக்கோவிலின் சுற்று ப்ரகாரத்தில் விஷ்ணுவிர்க்கான அம்சங்களுடனும்,  கிழக்கு பார்த்த முகமுமாய்

வலக்காலை இடக்காலின் பின்புறம் எருமைத்தலையின் மீதிட்டு அட்டனக்கால் வடிவில் மானின் மேல் தன் வலக்கையினை ஊன்றிய படி குமிழ் சிரிப்பும் கொடியிடையுமாய் ஒய்யார வடிவில் திருக்காட்சி அருளுகிறாள். வடித்தவனுக்கு தான் எவ்வளவு சிரத்தை இவ்வளவு அழகையும் ஒரு சேர கொண்டுவர... ஆகா

கூடுதல் தகவல் - வலது கையில் உள்ள ப்ரயோக சக்கரம் தூக்கி எறியும் படி இருந்தால் 11ம் நூற்றாண்டிற்க்கு முன்னும் வட்டமாக முழு மதியினை போல்  இருந்தால் 11ம் நூற்றாண்டுக்கு பின்னும் எடுப்பிக்கப்பட்ட சிலை என கணக்கிட்டு அறியலாம். தகவல் - Sasi Dharan அண்ணா

இடம்: பக்தவத்சலேஷ்வரர் திருக்கோவில். திருக்கழுக்குன்றம்

Tnx to Celebrate Kanchi

Monday, December 4, 2017

மறக்க முடியாத தீபத்திருநாள்

வாழ்வில் மறக்க முடியாத தீபத்திருநாள்.

காஞ்சி அடுத்த களக்காட்டூர் எனுமிடத்தில் ஊரில் இருந்து தொலைவில் ஏரிக்கரையின் ஓரத்தில் வீற்றிருப்பவர் ஊருணியாழ்வார் எனும் அக்னீசுவரர். இக்கோயில் லிங்கம் கருவூரார் சித்தரால் எடுப்பிக்கப்பட்டது என்பது ஐதீகம்.

இக்கோவிலின் மேற்கில் எழுந்தருளியுள்ள அர்த்தநாரீசுவரரை ஞாயிறன்று மூன்று நெய்விளக்கேற்றி வழிபட தம்பதிகளின் சண்டைகள் தீரும், திருமணத் தடை நீங்கும் காதல் கைகூடும் என்பது ஐதீகம்.

Sasi Dharan அண்ணனின் அழைப்பின் பேரில் தீபத்திருநாளன்று (2.12.17) கோவிலினை தூய்மைபடுத்த காலையிலேயே சென்றிருந்தோம். ஏமாற்றம் அளிக்காமல் எங்கள் அணுக்கன் படை வழக்கம் போல் பெரும் படையுடன் வந்திருந்தது. கோவிலை அடைய ஊரின் முடிவிலிருந்து ஏரிக்கரையின் மேலே ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்ததினால் களைப்புற்றிருந்தேன். தூரத்தில் கோவிலின் அர்ச்சகர் தோற்றத்தால் மட்டும் வயதான அய்யா திரு.இராஜேந்திரன் அதே ஏரிக்கரையின் மீது இரண்டு பெரிய மூட்டைகளுடனும் பெரிய ஏணியுடனும் தன் மகனுடன் வந்துகொண்டிருந்தார். அந்நேரம் என் பெருங்களைப்பு தவிடுபொடியாகி இருந்தது.

நல்மனிதர்களை இறைவன் தன்னுடனே வைத்திருப்பார். அதனாலே அந்த அர்ச்சகர் தினமும் இறைவனை பணிவிடை செய்யும் பேறு பெற்றார் போல. கோவிலை சுற்றி அடிக்கபட்டிருந்த வெள்ளை பூச்சை களைவதாய் சொல்லி அணுக்கன் படை தங்களின் நிறத்தினை சிறிது சிறிதாமய் வெள்ளை நிறத்திற்க்கு மாற்றிக்கொண்டிருந்து.

பின் கோவிலில் மரக்கன்றுகளை நட்டு அகல் விளக்குகளை சுத்தம் செய்து பின் வயல்வெளிகளின் பாதையில் சேற்றில் சிறிது தூரம் நடந்து சோழர்களின் காவல் தெய்வமான வராகி அம்மனை தொழுது பின் மீண்டும் கோவிலை அடைந்தோம். அந்தி பொழுதினில் அக்கோவில் சுற்றி எறியும் நூற்றுக்கும் மேற்ப்பட்ட தீபங்களின் ஒளியில் ....... ஆகா  அதை சொல்ல வார்த்தைகளே கிடைக்காதது தான் மிச்சம்.

அரசன் அருமொழி வர்மன் (இராஜ ராஜ சோழன்)  அறிவுறுத்தலின் படி நாட்டு மக்களின் நலனுக்காக ஒரு விளக்கும், தன் அரசனின் மீதான நலன்கொண்டு அவனுக்காக ஒரு விளக்கும் ஏற்றிய காடன்மயிந்தன் என்ற அவ்வூர் அரசதிகாரிக்கு இரு விளக்கு ஏற்றினர் நம் படை. கோவிலே தீபத்தில் ஜொலித்திருக்க Chennai Sevas Pandian சாரின் அண்ணன் செய்த சொக்கபனையினை கொளுத்தியும் Ashok Ponnuvelu சார் கொண்டு வந்த பட்டாசுகளை வெடித்தும் அணுக்கன் படையே அகமகிழ்ந்திருந்தது. அதே சமயம் அணுக்கன் படையின் பாடல்களினால் அக்னீசுவரரும் அகமகிழ்ந்திருப்பார் போல, அவன் என்ன நினைக்கிறான் என்று யார்ரறிவார்.

அந்த அர்ச்சகரோ எதையும் எதிர்பாராமல் தினமும் இறைவனை பூஜித்தி வருகிறார். அணுக்கன் படையும் அர்ச்சகரும் அவரின் மகனும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் பணியாற்றினர். இவர்களுக்காக உணவளித்த மற்றும் பூஜைபொருளளித்த நல்லுள்ளங்களுக்காக இறைவனை என்றென்றும் தொழுவேன்.

அங்கு அர்ச்சகரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது "இப்ப இந்த கோயிலுக்கு யாருமே வர்ரதில்லை பா, ஆனாலும் கோயிலுக்கு எந்த குறையும் இல்ல" என்று சோகத்தை அள்ளி தெளித்தார் போல் சொல்லும் அந்நேரம் அங்கோ தங்க ஆபரணங்களினாலும் கூட்ட நெரிசலலினாலும் மூச்சு விட சிரமப்பட்டு கொண்டிருந்தார் அண்ணாமலையார்.

இடம்.

Agneeshwarar temple, kalakkattur,
Kanchipuram, Tamil Nadu 631601, India

https://goo.gl/maps/bCfAo21A4u82

Mamandur Rock cut temple