1200 (கி.பி 9) ஆண்டுகள் பழமையான திருக்கோவிலின் சுற்று ப்ரகாரத்தில் விஷ்ணுவிர்க்கான அம்சங்களுடனும், கிழக்கு பார்த்த முகமுமாய்
வலக்காலை இடக்காலின் பின்புறம் எருமைத்தலையின் மீதிட்டு அட்டனக்கால் வடிவில் மானின் மேல் தன் வலக்கையினை ஊன்றிய படி குமிழ் சிரிப்பும் கொடியிடையுமாய் ஒய்யார வடிவில் திருக்காட்சி அருளுகிறாள். வடித்தவனுக்கு தான் எவ்வளவு சிரத்தை இவ்வளவு அழகையும் ஒரு சேர கொண்டுவர... ஆகா
கூடுதல் தகவல் - வலது கையில் உள்ள ப்ரயோக சக்கரம் தூக்கி எறியும் படி இருந்தால் 11ம் நூற்றாண்டிற்க்கு முன்னும் வட்டமாக முழு மதியினை போல் இருந்தால் 11ம் நூற்றாண்டுக்கு பின்னும் எடுப்பிக்கப்பட்ட சிலை என கணக்கிட்டு அறியலாம். தகவல் - Sasi Dharan அண்ணா
இடம்: பக்தவத்சலேஷ்வரர் திருக்கோவில். திருக்கழுக்குன்றம்
Tnx to Celebrate Kanchi
Fantastic...Good!
ReplyDeleteநன்றி சார்🙏
Delete