Wednesday, December 6, 2017

விஷ்ணுதுர்க்கை


1200 (கி.பி 9) ஆண்டுகள் பழமையான திருக்கோவிலின் சுற்று ப்ரகாரத்தில் விஷ்ணுவிர்க்கான அம்சங்களுடனும்,  கிழக்கு பார்த்த முகமுமாய்

வலக்காலை இடக்காலின் பின்புறம் எருமைத்தலையின் மீதிட்டு அட்டனக்கால் வடிவில் மானின் மேல் தன் வலக்கையினை ஊன்றிய படி குமிழ் சிரிப்பும் கொடியிடையுமாய் ஒய்யார வடிவில் திருக்காட்சி அருளுகிறாள். வடித்தவனுக்கு தான் எவ்வளவு சிரத்தை இவ்வளவு அழகையும் ஒரு சேர கொண்டுவர... ஆகா

கூடுதல் தகவல் - வலது கையில் உள்ள ப்ரயோக சக்கரம் தூக்கி எறியும் படி இருந்தால் 11ம் நூற்றாண்டிற்க்கு முன்னும் வட்டமாக முழு மதியினை போல்  இருந்தால் 11ம் நூற்றாண்டுக்கு பின்னும் எடுப்பிக்கப்பட்ட சிலை என கணக்கிட்டு அறியலாம். தகவல் - Sasi Dharan அண்ணா

இடம்: பக்தவத்சலேஷ்வரர் திருக்கோவில். திருக்கழுக்குன்றம்

Tnx to Celebrate Kanchi

Monday, December 4, 2017

மறக்க முடியாத தீபத்திருநாள்

வாழ்வில் மறக்க முடியாத தீபத்திருநாள்.

காஞ்சி அடுத்த களக்காட்டூர் எனுமிடத்தில் ஊரில் இருந்து தொலைவில் ஏரிக்கரையின் ஓரத்தில் வீற்றிருப்பவர் ஊருணியாழ்வார் எனும் அக்னீசுவரர். இக்கோயில் லிங்கம் கருவூரார் சித்தரால் எடுப்பிக்கப்பட்டது என்பது ஐதீகம்.

இக்கோவிலின் மேற்கில் எழுந்தருளியுள்ள அர்த்தநாரீசுவரரை ஞாயிறன்று மூன்று நெய்விளக்கேற்றி வழிபட தம்பதிகளின் சண்டைகள் தீரும், திருமணத் தடை நீங்கும் காதல் கைகூடும் என்பது ஐதீகம்.

Sasi Dharan அண்ணனின் அழைப்பின் பேரில் தீபத்திருநாளன்று (2.12.17) கோவிலினை தூய்மைபடுத்த காலையிலேயே சென்றிருந்தோம். ஏமாற்றம் அளிக்காமல் எங்கள் அணுக்கன் படை வழக்கம் போல் பெரும் படையுடன் வந்திருந்தது. கோவிலை அடைய ஊரின் முடிவிலிருந்து ஏரிக்கரையின் மேலே ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்ததினால் களைப்புற்றிருந்தேன். தூரத்தில் கோவிலின் அர்ச்சகர் தோற்றத்தால் மட்டும் வயதான அய்யா திரு.இராஜேந்திரன் அதே ஏரிக்கரையின் மீது இரண்டு பெரிய மூட்டைகளுடனும் பெரிய ஏணியுடனும் தன் மகனுடன் வந்துகொண்டிருந்தார். அந்நேரம் என் பெருங்களைப்பு தவிடுபொடியாகி இருந்தது.

நல்மனிதர்களை இறைவன் தன்னுடனே வைத்திருப்பார். அதனாலே அந்த அர்ச்சகர் தினமும் இறைவனை பணிவிடை செய்யும் பேறு பெற்றார் போல. கோவிலை சுற்றி அடிக்கபட்டிருந்த வெள்ளை பூச்சை களைவதாய் சொல்லி அணுக்கன் படை தங்களின் நிறத்தினை சிறிது சிறிதாமய் வெள்ளை நிறத்திற்க்கு மாற்றிக்கொண்டிருந்து.

பின் கோவிலில் மரக்கன்றுகளை நட்டு அகல் விளக்குகளை சுத்தம் செய்து பின் வயல்வெளிகளின் பாதையில் சேற்றில் சிறிது தூரம் நடந்து சோழர்களின் காவல் தெய்வமான வராகி அம்மனை தொழுது பின் மீண்டும் கோவிலை அடைந்தோம். அந்தி பொழுதினில் அக்கோவில் சுற்றி எறியும் நூற்றுக்கும் மேற்ப்பட்ட தீபங்களின் ஒளியில் ....... ஆகா  அதை சொல்ல வார்த்தைகளே கிடைக்காதது தான் மிச்சம்.

அரசன் அருமொழி வர்மன் (இராஜ ராஜ சோழன்)  அறிவுறுத்தலின் படி நாட்டு மக்களின் நலனுக்காக ஒரு விளக்கும், தன் அரசனின் மீதான நலன்கொண்டு அவனுக்காக ஒரு விளக்கும் ஏற்றிய காடன்மயிந்தன் என்ற அவ்வூர் அரசதிகாரிக்கு இரு விளக்கு ஏற்றினர் நம் படை. கோவிலே தீபத்தில் ஜொலித்திருக்க Chennai Sevas Pandian சாரின் அண்ணன் செய்த சொக்கபனையினை கொளுத்தியும் Ashok Ponnuvelu சார் கொண்டு வந்த பட்டாசுகளை வெடித்தும் அணுக்கன் படையே அகமகிழ்ந்திருந்தது. அதே சமயம் அணுக்கன் படையின் பாடல்களினால் அக்னீசுவரரும் அகமகிழ்ந்திருப்பார் போல, அவன் என்ன நினைக்கிறான் என்று யார்ரறிவார்.

அந்த அர்ச்சகரோ எதையும் எதிர்பாராமல் தினமும் இறைவனை பூஜித்தி வருகிறார். அணுக்கன் படையும் அர்ச்சகரும் அவரின் மகனும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் பணியாற்றினர். இவர்களுக்காக உணவளித்த மற்றும் பூஜைபொருளளித்த நல்லுள்ளங்களுக்காக இறைவனை என்றென்றும் தொழுவேன்.

அங்கு அர்ச்சகரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது "இப்ப இந்த கோயிலுக்கு யாருமே வர்ரதில்லை பா, ஆனாலும் கோயிலுக்கு எந்த குறையும் இல்ல" என்று சோகத்தை அள்ளி தெளித்தார் போல் சொல்லும் அந்நேரம் அங்கோ தங்க ஆபரணங்களினாலும் கூட்ட நெரிசலலினாலும் மூச்சு விட சிரமப்பட்டு கொண்டிருந்தார் அண்ணாமலையார்.

இடம்.

Agneeshwarar temple, kalakkattur,
Kanchipuram, Tamil Nadu 631601, India

https://goo.gl/maps/bCfAo21A4u82

Mamandur Rock cut temple